×

மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர்மழை திருவில்லி. அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

திருவில்லிபுத்தூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பரவலாக பெய்து வருகிறது. திருவில்லிபுத்தூர் நகர் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவில்லிபுத்தூர் செண்பகதோப்பு பகுதியிலுள்ள ராக்காச்சி கோயில் அருவி, மீன்வெட்டி பாறை அருவி, சரக்கு பாறை அருவி மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மலைவாழ் மக்கள், மலையடிவார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Tags : Western Ghats , Continuous rain in the Western Ghats. Increase in water level in waterfalls
× RELATED திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டாற்று வெள்ளம்