×

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை டிஜிபி ஆய்வு

தாம்பரம்: சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை சென்னை, ஆவடி, தாம்பரம் ஆணைரகங்கள் என மூன்றாக பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் ஆணையராக ரவி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தாம்பரம், சேலையூர் ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் தற்காலிகமாக அமையவிருக்கிறது.

இந்நிலையில் நேற்று காலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் மற்றும் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ரவி ஐபிஎஸ் ஆகியோர்  தற்காலிக தாம்பரம் ஆணையர் அலுவலகத்தை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.  மேலும் தாம்பரம் காவல் ஆணையரகம் அமைப்பதற்காக, தாம்பரம் காசநோய் மருத்துவமனை அருகே காலியாக இருக்கும் அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Tamaram Police Commissioner Office DigP , DGP inspects Tambaram Police Commissioner's Office
× RELATED முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: பாஜ மாநில நிர்வாகி கைது