×

கிடுகிடுவென உயர்ந்து வரும் டீசல் விலை; பெட்ரோலை காட்டிலும் டீசல் விலை உயர்வு: ரூ.100.59-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.104.52 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.100.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் சற்று விலை குறைந்து இருந்த நேரத்தில், வாகன ஓட்டிகள், பொதுமக்களும் பெருமூச்சுவிட்டனர். ஆனால் அது வெகுநாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் அச்சம் அடைய செய்யும் அளவுக்கு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தில் பயணிக்க தொடங்கியது. கடந்த மாதம் இறுதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்தது. பெட்ரோலை பொறுத்தவரையில், கடந்த ஆகஸ்டு மாதத்தில் விலை குறைந்த நேரத்தில் ஒரு லிட்டர் ரூ.100-க்கு கீழ் சென்று, விலை உயரத்தொடங்கியதும் மீண்டும் ரூ.100-ஐ கடந்து, தற்போது ஒரு லிட்டர் ரூ.104 என்ற விலையில் விற்பனை ஆகிறது.

அதேபோல், டீசல் விலை பெட்ரோலை விட கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தினமும் பெட்ரோலை காட்டிலும் டீசல் விலை உயர்வுதான் அதிகமாக இருக்கிறது. நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் 103 ரூபாய் 92 காசுக்கு விற்பனையான பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 30 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 104 ரூபாய் 22 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலையை பார்க்கையில், நேற்று முன்தினம் 99 ரூபாய் 92 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று அதன் விலையில் லிட்டருக்கு 33 காசு உயர்ந்து, 100 ரூபாய் 25 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து, ரூ.104.52 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 34 பைசா அதிகரித்து ரூ.100.59 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Sharply, rising, diesel, price
× RELATED தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு முடித்த...