×

சுகாதாரத்துறை ஆய்வாளர் சங்க மாநில தலைவர் தேர்வு

சென்னை: தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர், சுகாதார அலுவலர் சங்கத்தின் மாநில அளவிலான தேர்தல் திருச்சியில் நடந்தது. இதில் முதன்முறையாக வாக்கு சீட்டுகள் மூலம் வாக்களிக்கும் தேர்தல் நடந்தது. தேர்தலில், மாநில தலைவர் பதவிக்கு திருவேற்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், கொடைக்கானல் நகராட்சி, திருப்பத்தூர் நகராட்சியை சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள் போட்டியிட்டனர்.

மாநிலச் செயலாளர் பதவிக்கு சிவகாசி நகராட்சி செந்தில்ராம் குமார், குன்னூர் நகராட்சி மால்முருகன் போட்டியிட்டனர்.தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவில், மாநில தலைவராக திருவேற்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். மாநில செயலாளராக சிவகாசி செந்தில் ராம்குமார், மாநில பொருளாளராக புளியங்குடி சுகாதார ஆய்வாளர் கைலாச சுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு அனைத்து நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.Tags : State President ,Health ,Analysts ,Association , Health Analysts Association Election of Head of State
× RELATED நடவடிக்கை எடுக்க கோரிக்கை பள்ளி...