×

சொல்லிட்டாங்க...

கடந்த 7 ஆண்டுகளில் நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளோம். ஊழல் சாதாரண மனிதனின் உரிமையை பறிக்கிறது.
- பிரதமர் மோடி

மத்தியில் பாஜ ஆட்சி அமைந்த உடன் இந்தி பேசாத மக்கள் மீது இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை திணிக்கிற முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது.
-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

எனக்கு வயது ஆகிவிடவில்லை. நான் இளமையாக உள்ளேன். மரணம் வரை எனக்கு அரசியலில் இருந்து ஓய்வில்லை.
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

ஒன்றிய பாஜ ஆட்சியில் எந்த வகையில் இந்தி திணிக்க முடியுமோ, அந்த வகையில் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Tags : Prime Minister Modi, KS Alagiri, Vaiko, Mutharasan
× RELATED சொல்லிட்டாங்க...