×

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் : நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 450 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். விவசாயிகள் முன்னிலையில் கூட்டுறவு சங்க அலுவலர்கள் ஏலத்தை நடத்தினர். இதில் பருத்தி குவிண்டால் அதிகபட்சம் ₹8,911க்கும், குறைந்தபட்சம் ₹4,805க்கும் ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 450 மூட்டை பருத்தி, ₹10 லட்சத்துக்கு ஏலம் போனதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Namakkal Co-operative Society , Namakkal: The cotton auction was held yesterday at the Namakkal Agricultural Producers Cooperative Marketing Association. Various towns of the district
× RELATED முன்கள பணியாளர்களாக...