×

மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸின் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் கார்த்தி ஒப்பந்தம்

சென்னை: நாட்டில் மிகப்பெரிய தங்கம் மற்றும் வைர நகைகள் சில்லரை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நடிகர் கார்த்தியை நிறுவனத்தின் தூதராக (பிராண்ட் அம்பாசிடராக) ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ் மக்களுடன் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் தனது பிணைப்பை மேலும் வலுப்படுத்த நடிகர் கார்த்தியுடனான இந்த இணைப்பு உதவும். நிறுவனத்தின் உள் ஆய்வுகளுக்கு பிறகு நடிகர் கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

இதுகுறித்து மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது கூறியதாவது, “இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு மற்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கென்று தனிப்பட்ட கலாச்சாரம் உள்ளது. நாங்கள் அந்த பன்முக தன்மையை மதிக்கிறோம். நம்பிக்கை ஏற்படுத்தும் குரல் மூலம் பிராண்டின் நெறிமுறைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற எங்கள் நிறுவனத்தின் ஆசையால் நடிகர் கார்த்தியுடன் நாங்கள் இணைந்துள்ளோம். தனது தொண்டு பணிகளுக்காகவும் சமூகப் பணிகளுக்கான அர்ப்பணிப்பிற்காகவும் பெரிதும் மதிக்கப்படும் நடிகர் கார்த்தியின் குண நலன் சமூகத்திற்கு பெரிதும் பலனளிக்கும் தொண்டு முயற்சிகளை முன்னெடுக்கும்,” இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Karthi ,Malabar Gold and Diamonds , Malabar Gold, Diamond, Brand Ambassador, Actor, Karthi
× RELATED மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கு ப.சிதம்பரம், கார்த்தி நேரில் ஆஜராக சம்மன்