×

நிதி நிறுவனத்திடம் வாங்கிய ரூ.1.21 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டிற்கு சீல்: பைனான்ஸ் அதிகாரிகளிடம் கெஞ்சும் வீடியோ வைரல்

சென்னை: நிதி நிறுவனத்திடம் வாங்கிய ரூ.1.21 கோடி கடனை திருப்பி செலுத்தாததால், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தியின் வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில், அவர் வங்கி அதிகாரிகளிடம் கெஞ்சி கேட்கும் வீடியோ வைரலாகியுள்ளது. பாஜ செயற்குழு உறுப்பினரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும் நடிகையுமான மதுவந்தியின் வீடு சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ளது. இந்த வீட்டை வாங்குவதற்கு 2016ம் ஆண்டு இந்துஜா ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் அவர் கடன் பெற்றுள்ளார். ஆனால், கடன் வாங்கி சில மாதங்கள் மட்டுமே வாங்கிய கடனுக்கான தவணைகளை கட்டியுள்ளார். மேலும் வாங்கிய கடனுக்கு வட்டியும் தவணை பணத்தையும் கட்டாமல் மதுவந்தி இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வங்கி அதிகாரிகள் மதுவந்தி வாங்கிய பணத்துக்க வட்டியுடன் அசலையும் சேர்த்து 1 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 பணத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டவேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அனுப்பிய நோட்டீஸூக்கும் உரிய பதிலை மதுவந்த அளிக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு வங்கி, வழங்கிய கால அவகாசம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள மதுவந்தியின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு சீல் வைத்தனர். மேலும் அதிகாரிகளிடம் மதுவந்தி காலில் விழுந்து கேட்பதாக கெஞ்சும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம் மதுவந்தி, சார் பிளீஸ்... நான் உங்களை கெஞ்சி கேட்கிறேன். பிளீஸ். ரொம்ப, ரொம்ப அசிங்கமாக ேபாய் விடும். பிளீஸ். ஒரு நிமிடம் சார்... சீல் எல்லாம் வைக்காதீங்க... கெஞ்சி கேட்கிறேன். இந்த மன்த் என்டில்(மாத கடைசியில்) கொடுக்கிறேன் என்று பேசியும் எனக்கு இது நடக்கிறது. இந்த மன்தில் கொடுக்கவில்லை என்றால், ெஜயிலில் தள்ளுங்கள். (அதிகாரிகள்- போன மாதம் தான் இப்படி சொன்னீங்க. எச்.டி.எப்.சி.யில் லோன் வந்து இருக்கிறது என்று சொன்னீங்க). சத்தியமாக எச்.டி.எப்சி. வங்கியில் லோன் வந்து விட்டது. நான் உங்களுக்கு செக் கொடுத்து விடுகிறேன். நான் காலில் வேண்டுமென்றாலும் விழுகிறேன்.

ெராம்ப அசிங்கமாக போய் விடும். கெஞ்சி கேட்கிறேன். எனக்காக பண்ணி கொடுங்கள். (அதிகாரிகள்- கோர்ட்டில் இருந்து ஆர்டர் வாங்கியுள்ளோம்) இவ்வாறு அந்த வீடியோவில் உள்ளது. முன்னதாக இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் வேப்பேரி அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்றமும் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை நிதி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்தே அதிகாரிகள் மதுவந்தியின் வீட்டை போலீஸ் பாதுகாப்போடு பூட்டி சீல் வைத்தனர். ஏற்கனவே பத்மா சேஷாத்திரி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தாக கூறி ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : YG Mahendran ,Madhuvanthi , Actor YG Mahendran's daughter Madhuvanthi's house sealed for non-repayment of Rs 1.21 crore loan from a financial institution: Video viral pleading with accounting officials
× RELATED ராணுவ வீரர்களாக இரட்டை வேடத்தில் விக்னேஷ்