×

தமிழகத்தில் மேலும் 1,630 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் மேலும் 1630 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,50,725 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,630 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17,231 ஆக உள்ளது. இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,643 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,07,796 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 17 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல், சென்னையில் நேற்று புதிதாக 184 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.


Tags : Corona ,Tamil Nadu , Corona for another 1,630 people in Tamil Nadu
× RELATED தமிழகத்தில் 1,245 பேருக்கு கொரோனா