×

கூடலூரில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பள்ளி மாணவர்கள் அவதி

கூடலூர்: கூடலூரில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பள்ளி மாணவர்கள் அவதியடைவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு, வடக்கு காவல் நிலையத்தின் கீழ்பகுதி, திருவள்ளுவர் பள்ளி செல்லும் தெருவில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குறுக்குச்சந்து பாதையை சிலர் ஆக்கிரமித்து நடுவே கல்லுக்கால் ஊன்றி உள்ளனர்.

இதனால் மாணவர்கள், ஆசிரியைகள் தற்போது பள்ளி செல்ல நீண்டதூரம் சுற்றிவரவேண்டும் என்பதால் அவதியடைந்துள்ளனர். இது குறித்து கூடலூர் காவல்துறை மற்றும் நகராட்சியில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி அவ்வழியாக மாணவ, மாணவியர் பள்ளி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cuddalore , School children suffer due to sidewalk occupation in Cuddalore
× RELATED கடலூர் விபத்தில் மாணவர் சாவு: இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி