×

கோயில் யானைகள் பராமரிப்பு அரசுக்கு ஐகோர்ட் யோசனை

சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பான பொது நல வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அறிக்கையில், தமிழகம் முழுதும் 30 யானைகள் கோயில்களில் முறையான இடத்தில் பராமரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், 34 யானைகள், பாதிக்கு மேற்பட்ட யானைகளுக்கு பாகன் இல்லை என்றார்.

அப்போது தலைமை நீதிபதி, இன்று (நேற்று) காலை குதிரை ஒன்று மெரினா சாலையின் குறுக்கே வந்துவிட்டது. காரிலிருந்து இறங்கி உதவ மனம் பதைபதைத்தது. மதத்தின் பெயரால் 2000 சதுர அடி கான்கிரீட் தளத்தில் யானைகளை பராமரிப்பதற்கு பதில் இயற்கையான வனப்பகுதியில் பராமரிக்கலாமே. யானைகளை இயற்கையான பசுமையான இடத்தில் பராமரிக்கலாம். விழாக்காலங்களில் மட்டும் கோயிலுக்கு யானைகளை அழைத்து வரலாம் என யோசனை தெரிவித்தார்.

Tags : ICourt , ICourt idea for temple elephant care government
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு