×

ஆக.5 முதல் கேரளாவில் இருந்து வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை; ' 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதி ' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு உடல் வெப்பநிலையை கண்டறியும் தெர்மல் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதால் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பதாக கூறினார். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு சென்னை விமான நிலையத்திலேயே உடல் வெப்பநிலையை கண்டறியும் தெர்மல் பரிசோதனை நடத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வரும் 5-ம் தேதி முதல் பாதிப்பு அதிகம் உள்ள கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு ஆர்டிபிசிஆர் சோதனை அல்லது தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். கேரளாவில் இருந்து வருபவர்கள் இரு தவணை தடுப்பூசி சான்று காட்டினால் தமிழகத்திற்கு வரலாம். விமான நிலைத்தில் 13 நிமிடத்தில் கொரோனா சோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை விரைவில் அமலாகிறது. கோவை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழகத்துக்கு வருவதற்கு 13 இடங்கள் உள்ளன. அந்த பகுதிகள் 5-ந் தேதி அதிகாலை முதல் போலீசின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் கூறினார்.


Tags : RTPCR ,Kerala ,Minister ,Ma Subramanian , RTPCR for those coming from Kerala from Aug. 5 Experiment; 'Permission is granted only if 2 doses of vaccine have been given' - Minister Ma Subramaniam
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...