×

பயணிகள் வருகை குறைந்ததால் தற்காலிக ரத்தான 20 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கம்!: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னை: பயணிகள் வருகை குறைந்ததால் தற்காலிக ரத்தான 20 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  


* சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் தினசரி சிறப்பு ரயில் ஜூன் 20 முதல் மீண்டும் இயக்கப்படும்.


* மறுமார்க்கத்தில் தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் தினசரி சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் மீண்டும் இயக்கப்படும்.


* சென்னை எழும்பூர் - திருச்சி சிறப்பு ரயில் இரு வழித்தடங்களிலும் ஜூன் 20, 21ல் மீண்டும் இயக்கப்படும்.


* சென்னை எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரயில்கள் இருவழித்தடங்களிலும் முறையே  20, 21 முதல் மீண்டும் இயக்கப்படும்.


*  சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இரு வழித்தடத்திலும் முறையே  20, 21 முதல் இயக்கப்படும்.


* சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் இருவழித்தடங்களிலும் முறையே  20, 21 முதல் மீண்டும் இயக்கப்படும்.


* சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இரு வழித்தடத்திலும் ஜூன் 20, 21ல் மீண்டும் இயக்கப்படும். 

 

* கோவை - நாகர்கோவில்  தினசரி சிறப்பு ரயில் இரு வழித்தடத்திலும் இரு வழித்தடத்திலும் ஜூன் 20, 21 முதல் மீண்டும் இயக்கப்படும். 


*  திருவனந்தபுரம் - மதுரை தினசரி சிறப்பு ரயில் இரு  வழித்தடங்களிலும் ஜூன் 20, 21 முதல் மீண்டும் இயக்கப்படும்.


* மதுரை - புனலூர் தினசரி சிறப்பு ரயில் இரு  வழித்தடங்களிலும் ஜூன் 20, 21 முதல் இயக்கப்படும்.Tags : Passenger arrivals, 20 special trains, Southern Railway
× RELATED அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு...