×

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்: தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்.பி-யான ஏ.கே.எஸ்.விஜயன் திமுக விவசாய அணியின் செயலாளராக உள்ளார். மேலும்  ஏ.கே.எஸ்.விஜயன் ஓராண்டுக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக செயல்படுவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில அமைச்சர் பதவிக்கு இணையான இந்த பதவியில் விஜயன் ஓராண்டு காலம் நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடியை வரும் 17-ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டு நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் இவருக்கும் ஒரு அறை ஒதுக்கப்படும். முக்கியமான விவாதங்களில் பங்கேற்பார். கடந்த அதிமுக ஆட்சியில் தளவாய்சுந்தரம் டெல்லி பிரதிநிதியாக இருந்தார். தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கும் பொழுது சிறப்பு பிரதிநிதி அந்த சந்திப்பின் போது உடன் இருப்பார். இந்நிலையில் டெல்லியின் சிறப்பு பிரதிநிதியாக திமுக முன்னாள் எம்பி விஜயனை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு நியமனம் செய்துள்ளார். Tags : Former ,AKS Vijayan ,Special Representative ,Government of Tamil Nadu ,Delhi , Appointed by the Special Representative of the Government of Tamil Nadu, Delhi, Vijayan
× RELATED தி.மலையில் வலுக்கும் அதிமுக உட்கட்சி...