×

நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழப்பு: சினிமா பிரபலங்கள் இரங்கல்

சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ்  மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த், குட்டி ரமேஷ் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர்.  


இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு இயக்குனர் பொன்ராம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதத்தில் நடிகர்கள் பலர் உயிரிழந்து வருவது திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பவுன்ராஜ் இரப்பிற்கு நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Tags : Paunraj , Cast and assistant director, Paunraj, deceased
× RELATED ரெண்டாவது முறையும் ஆத்தோட போயிருச்சு...