×

அட்சய திருதி நெறுங்கும் நிலையில் குறைந்து வரும் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.40 குறைவு

சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.40 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிகரித்தால், மறுநாள் விலை குறைவதுமான நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.56 குறைந்தது. இதைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.4,505க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.36,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையின் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.30 குறைந்து உயர்ந்து ரூ.73.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அட்சய திருதி, ரமலான் பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறைந்து வரும் தங்க்தின் விலையால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Tags : Atsya Triti , Atsya Triti, declining, the price of gold
× RELATED ஏப்-27: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.