×

சென்னையில் உற்பத்தியாகும் 45,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானாவிற்கு மத்திய அரசு அனுப்பியதால் தமிழக அரசு அதிருப்தி!!

சென்னை : சென்னை ஸ்ரீபெரும்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் 45,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கனா மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் போதுமான படுக்கை மற்றும் ஆக்சிஜன் இன்றி தடுமாறி வருகின்றன. இந்த நிலையில் சென்னை ஸ்ரீபெரும்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் 45,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவால் தமிழகத்தில் தங்கு தடையின்றி ஆக்சிஜன் விநியோகிக்கும் திட்டத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இரு மாநிலங்களை விட தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இது தொடர்பாக தனியார் நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் முடிவு தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். பிற மாநிலங்களுக்கு உதவ தமிழகம் தயாராக இருப்பதாக கூறியுள்ள அவர், அதே வேளையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் ஆக்சிஜன் சப்ளை விவகாரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.


Tags : TN Government ,Chennai ,Andhra ,Telangana , மத்திய அரசு
× RELATED ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு: நாட்டு...