×

வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 54 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேர் பாதிப்பு; 48 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை  10 லட்சத்து 13 ஆயிரத்து 378 (10,13,378) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும்  கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு  வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 10,13,378  ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 6,250 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 9,20,369 குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,205 ஆக  உயர்ந்துள்ளது.
* அரசு மருத்துவமனையில் 22; தனியார் மருத்துவமனையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 3,711 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,90,364 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 2,14,00,549 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,01,329 மாதிரிகள்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 79,804 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 6,11,836 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 6,689 ஆண்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,01,506 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 4,297பெண்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும்  கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 263 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு  மையங்கள் 69; தனியார் மையங்கள் 194.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மேற்கு வங்கம்-22.
* ஆந்திரா-9.
* பீகார்-5.
* ஜார்கண்ட்-4.
* தெலுங்கானா-3.

* கர்நாடகா-3.
* சத்திஸ்கர்-2.
* கேரளா-2.
* அரியனா-1.
* டெல்லி-1.
* ராஜஸ்தான்-1.
* ஒடிசா-1.

* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* ஓமன்-1.

Tags : Tamil Nadu , Corona for 54 people who came to Tamil Nadu today from abroad: 10,986 people affected in one day in Tamil Nadu; 48 killed ... Health department report. !!!
× RELATED தமிழகத்தில் இன்றும், நாளையும்...