×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து விற்பனை

சென்னை: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சிறிய இறக்கம் கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 45 ரூபாய் விலை குறைந்து 4,450 ரூபாய்க்கும், ஒரு சவரன் 360 ரூபாய் விலை இறங்கி 35,600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 60 காசுகள் விலை குறைந்து 73.60 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,495ஆகவும், 8 கிராம் ரூ.35,960ஆகவும் இருந்தது.

24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,809 ஆகவும், 8 கிராம் ரூ.38,472ஆகவும் உள்ளது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.73.60 காசுகளாகவும், ஒரு கிலோ ரூ.73,600 ஆகவும் உள்ளது.

Tags : Chennai , gold rate
× RELATED வேகமெடுக்கும் கொரோனா தொற்று!:...