×

ஆரணி அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞர் அடித்து கொலை?

ஆரணி: ஆரணி அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி ஆரணி நகர காவல் நிலையத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வேலைப்பாடி கிராமத்தில் மோகன் என்பவரிடம் 3 இளைஞர்கள் 12,000 ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை மடக்கிப்பிடித்து கிராமமக்கள் அடித்ததில் படுகாயம் அடைந்த சக்திவேல் என்ற இளைஞர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சக்திவேலை அடித்து கொலை செய்தவர்களை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி அவரது குடுமப்த்தினர் மற்றும் புனலப்படி கிராமமக்கள் ஆரணி வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த கூடுதல் எஸ்.பி அசோக்குமார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தப்பித்து சென்றதாக கூறப்படும் சூர்யா மற்றும் மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

Tags : Arani , Murder
× RELATED ஆரணி நகராட்சியில் சாலையோரங்களில்...