×

தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் த.வா.க; ம.வி.க; ஆதித்தமிழர் பேரவை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து.!!!

சென்னை: திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி துக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன்  திமுக சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி முதல் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இன்று சென்னை அண்ணா அறிவாலாயத்தில் திமுக- தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக  பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், திமுக உடன் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்-தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதனைபோல், திமுக- ஆதித்தமிழர் பேரவை இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், திமுக உடன் ஆதித்தமிழர் பேரவைக்கு உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு ஒரு சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்-ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

திமுக- மக்கள் விடுதலை கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், திமுக உடன் மக்கள் விடுதலை கட்சிக்கு உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்- மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல்ராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மக்கள் விடுதலை கட்சி,   

திமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 57 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6  தொகுதிகள்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் 6 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள், காங்கிரஸ் 25 சட்டமன்ற தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமாரி நாடாளுமன்ற தொகுதி, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி, ஆதித்தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதி,மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு தொகுதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி:

அதிமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள், பாரதிய ஜனதா கட்சிக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கீடு செய்தது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.  ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமமுக கூட்டணி:

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதில், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி,  சங்கராபுரம் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் ஒவைசியின் கட்சி போட்டியிடுகிறது.


Tags : Stalin , Tamil Nadu Assembly Election: Allotment of a constituency to the Tamil Nadu Right to Life Party in the DMK alliance: Sign in the presence of MK Stalin
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...