×

6 தோல்வி; 2 வெற்றி; 9-வது முறை போட்டி: குமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.!!!

சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை  தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எச்.வசந்த்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி எச்.வசந்த்குமார் உயிரிழந்தார். இதனையடுத்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதி  காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தமிழகம் சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல்-6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில்  அதிமுகவுடன் கூட்டணயில் பாரதிய ஜனதா கட்சி உள்ளதால், சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை, 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20  சட்டமன்ற தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜக தலைமை அறிவித்துள்ளது. ஏற்கனவே, கன்னியாகுமரி நாடாளுமன்ற  பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் 8 முறை போட்டியிட்டு 6 முறை தோல்வியும், 2 முறை வெற்றியும் பெற்றுள்ளார். தற்போது, 9 முறையாக பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாகர்கோவிலில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள நிலையில், பொன். ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி

வருடம்      கட்சி        நிலை                 இடம்           வாக்குகள் (%)

1. 1991       பாஜக       தோல்வி              3-ம் இடம்         1,02,029 (18.82%)
2. 1996      பாஜக       தோல்வி              2-ம் இடம்         1,69,885 (30.25%)
3. 1998      பாஜக       தோல்வி              2-ம் இடம்         2,67,426 (45.08%)

4. 1999      பாஜக       வெற்றி                   -              3,07,319 (50.21%)
5. 2004     பாஜக       தோல்வி              2-ம் இடம்         2,45,797 (36.49%)
6. 2009      பாஜக       தோல்வி             2-ம் இடம்        2,54,474 (33.20 %)

7. 2014      பாஜக       வெற்றி                    -            3,72,906 (37.62 %)
8. 2019      பாஜக       தோல்வி             2-ம் இடம்        3,67,302 (35.04 %)


கன்னியாகுமரி மக்களவை தொகுதி

* தேர்தல் தேதி: ஏப்ரல்-6-ம் தேதி
* வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி
* வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி
* வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி
* வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி
* வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி


Tags : Kumari ,BJP ,Radhakrishnan , 6 failure; 2 wins; 9th time contest: Kumari as BJP candidate in parliamentary constituency by-election. Radhakrishnan announcement. !!!
× RELATED கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில்...