×

பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு  கோகுலபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சுயம்பு (60). நேற்று முன்தினம் மாலை சுயம்பு, தனது பேர குழந்தையுடன், பாரதியார் தெருவில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது, எதிரே பைக்கில் வந்த வாலிபர், சுயம்பு கழுத்தில் இருந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினார். புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போலீசார்,  ராட்டிண கிணறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த வாலிபரை, பிடித்து விசாரித்தனர். அதில், குண்டூர் பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்(29) என்றும், பாரதியார் தெருவில் நடந்து சென்ற சுயம்புவிடம் நகையை பறித்தார் என தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து, பைக்கை பறிமுதல் செய்த போலீசார், விக்னேைஷ கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.

Tags : Man arrested for stealing jewelery from woman
× RELATED வாடகையை உயர்த்தியதால் கோபம் கடைக்காரரை கத்தியால் குத்தியவர் கைது