×

நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி... அதிரடியாக குறைந்த தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 35 ஆயிரத்துக்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இதற்கிடையே 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ.34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.76 குறைந்து ரூ.4,266-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கம் வாங்க விரும்புவோருக்கு பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Pleasant surprise for jewelry lovers ... dramatically lower gold prices; 608 less per razor in a single day
× RELATED இந்திய மக்கள் மாற்றத்தை...