×

தமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக.வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது அதிமுக

சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிக்கப்படும் என கூறினார். கூட்டணி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை முதல்வர், துணை முதல்வர் கூட்டாக அன்புமணி ராமதாஸ், மற்றும் ஜி.கே.மணியிடம் வழங்கினர். சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - பாமக பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக தரப்பில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும் அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வைத்திலிங்கம், தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகிய முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை இன்று காலை நடைபெற்றது. தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 19-ம் தேதி மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். ஏப்ரல் 6-ம் தேதி ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு மே மாதம் 2-ம் தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரி நேற்று அறிவித்தார்.

 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. மேலும் அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு. தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர்.


Tags : TN Legislative ,Elections ,Baamaga ,Extrade-led Alliance , Tamil Nadu Assembly Election, AIADMK, BJP, 23rd constituency, AIADMK
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...