×

கலை பண்பாட்டு துறை சார்பில் ஓவிய கண்காட்சி

ஈரோடு : தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் ஆண்டுதோறும் ஓவிய மற்றும் சிற்ப கண்காட்சி நடத்தப்படுவது வாடிக்கையாகும். இந்நிலையில் கோவை மண்டலம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஓவிய சிற்ப கண்காட்சி ஈரோட்டில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
ஈரோடு கொங்கு கலையரங்கில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியினை கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் மாமல்லபுரம் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், சித்தன்னவாசல் உள்பட 30க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக கலை பண்பாட்டு துறை மண்டல உதவி இயக்குநர் ஹேமநாதன் வரவேற்றார்.


Tags : Erode: An annual painting and sculpture exhibition is held on behalf of the Arts and Culture Department of the Government of Tamil Nadu.
× RELATED பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்து...