×

வலுவாகும் 3வது கூட்டணி : கமலுடன் ஐக்கியமாகும் சரத்குமார்.. மக்களின் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் என உருக்கம்!!

சென்னை : ஒரு மித்த எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும்; கமல் ஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.  

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார்.  அதிமுகவில் இருந்து விலகி சட்டப்பேரவை தேர்தலில் ஐ.ஜே.கே.யுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சரத்குமாருடன் ஐ.ஜே.கே.பொதுச்செயலாளர் ரவி பாபுவும் கமல் ஹாசனை சந்தித்து பேசினார்.  

சரத்குமார் பேச்சு

இதன் பின்னர் பேசிய சரத்குமார்,சமத்துவ மக்கள் கட்சியை அழைத்து அதிமுக பேசும் என காத்திருந்தோம். பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காததால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து கமல்ஹாசனிடம் பேசினேன். நல்ல எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதால் கமலிடம் பேசினேன்.நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என கமல்ஹாசன் கூறியதால் சிறப்பான கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர்  என்பது பற்றி பேச திட்டமிட்டுள்ளோம்.கமல் ஹாசனை சந்தித்து அவரது கருத்துக்களை கேட்டு அறிந்துள்ளேன். அவரது கருத்துக்களையும் புரிந்து வைத்துள்ளேன். அவரைச் சார்ந்த பொறுப்பாளர்கள் அமர்ந்து பேச இருக்கிறோம் விரைவில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம் ” என்றார்.

Tags : Saratkumar ,Kamal , சரத்குமார்
× RELATED 7 செக் மோசடி வழக்கில் நடிகர்...