×

கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: இளவரசிக்கும் கொரோனா

பெங்களூரு: கொரோனா தொற்றால் பாதித்துள்ள சசிகலாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு  விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. அவருக்கு. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களை விட நேற்று அவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா, டீன் ஜெயந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அவரது ஆக்ஸிஜன் அளவு 98 சதவீதமாக உள்ளது.  இதனிடையில் சசிகலாவுடன் சிறையில் இருந்த  இளவரசி, சிறையில் அவர்களுக்கு உதவியாக இருந்த இரு பெண் போலீஸ் உள்பட சசிகலாவுடன் நெருக்கமாக இருந்த 8 பேருக்கு உடனடியாக கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. இதில்,  இளவரசிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவரும்  விக்டோரியா மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், கொரோனாவுக்கான மருந்துகள் வழங்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Princess ,Sasikala , Treatment for corona infection Good improvement in Sasikala's health: Princess Corona
× RELATED குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு...