×

கழிவு மேலாண்மை பணியில் அலட்சியம் இரு அதிகாரிகள் சஸ்பெண்ட்

கோலார்: கோலார்  நகரில் கழிவு மேலாண்மை பணியை சரியாக மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டிய இரு  அதிகாரிகள், இரு துப்புரவு தொழிலாளர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர்  உத்தரவிட்டார். கோலார் மாவட்ட கலெக்டர் சத்யபாமா நேற்று காலை திடீரென  கோலார் நகரில் பல பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது முக்கிய  சாலைகள், பஸ்நிலையம், அரசு கட்டிடங்கள், மருத்துவமனை உள்பட பொதுமக்கள்  அதிகம் கூடும் பகுதிகளில் குப்பை, கழிவுகள் அகற்றாமல் இருந்தது. கொசுக்கள்  உற்பத்தியாகி துர்நாற்றம் வீசியது.

இதை பார்த்து கோபமடைந்த அவர்,  உடனடியாக நகரசபை கமிஷனர் ஸ்ரீகாந்த், சுகாதார அதிகாரி புனித் ஆகியோரை  அழைத்து விளக்கம் கேட்டார்.
மேலும் கழிவு மேலாண்மை பணியை சரியாக கவனிக்காமல்  அலட்சியமாக செயல்பட்டதாக இளநிலை அதிகாரிகள் என்.தீபா மற்றும் பிரதீவ்ராஜ்  

ஆகியோரை துப்புரவு தொழிலாளர்களை பராமரிக்கும் மேஸ்திரிகளான வி.மோகன்,  வி.குமார் ஆகிய நான்கு பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மேலும்  கோலார் நகரசபை பகுதியில் கழிவு ேமலாண்மை பணிகள் சரியாக நடக்காமல் இருப்பது  தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல்

அலட்சியமாக நடந்து கொண்டதாக நகரசபை  கமிஷனர் ஸ்ரீகாந்த் மற்றும் நகரசபை துப்புரவு மற்றும் சுகாதார அதிகாரி  புனித் ஆகியோரை பணியிட

மாற்றம் செய்யும்படி மாநில உள்ளாட்சி துறை  ஆணையருக்கு சிபாரிசு செய்து கடிதம் அனுப்பியுள்ளார். கலெக்டரின் அதிரடி  நடவடிக்கை நகரசபை வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலைகள், பஸ்நிலையம், அரசு  கட்டிடங்கள், மருத்துவமனை உள்பட பொதுமக்கள்  அதிகம் கூடும் பகுதிகளில்  குப்பை அகற்றாமல் இருந்ததால் துர்நாற்றம் வீசியது

Tags : Suspended two officers for negligence in waste management work
× RELATED திருவாரூர் தொகுதியில் சட்டமன்ற...