×

ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் பிப்ரவரி 5ல் இளவரசியும் விடுவிக்கப்படுகிறார் என தகவல்

பெங்களூரு: ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் பிப்ரவரி 5ல் இளவரசியும் விடுவிக்கப்படுகிறார் என தகவல் கூறப்படுகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் ரூ.10 கோடி அபராதம் செலுத்தாததால் சுதாகரன் விடுதலையில் தாமதம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி உச்சநீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. மூவரின் தண்டனை காலமும் நிறைவடைய உள்ள நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி மூவரும் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது. இதையடுத்து சுதாகரன் தரப்பில் கடந்த மாதம் அபராதத் தொகையான ரூ.10கோடியே 10 ஆயிரத்தை பெங் களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

கடந்த 18ம் தேதி சசிகலாவின் அபராதமாக ரூ.10 கோடியே 10 ஆயிரம் செலுத்தப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முன்பு 35 நாட்கள் சிறையில் இருந்தார். இந்த நாட்கள் அவரது தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர் 2 முறை 17 நாட்கள் பரோலில் வீட்டுக்கு சென்றார். இந்த 17 நாட்களும் தண்டனை காலத்தில் சேர்க்கப்படும். அதன்படி பார்த்தால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் ஏற்கனவே கூறியபடி வருகிற ஜனவரி மாதம் 27-ம் தேதி தான் சசிகலா விடுதலை ஆவார் எனவும், பிப்ரவரி 5-ம் தேதி இளவரசியும் விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

Tags : Sasikala , On February 5, the princess is released
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!