×

9 வயது பையனின் ஆண்டு வருமானம் ரூ.219 கோடி!

சமீபத்தில் 2020-ம் வருடம் யூடியூப்பில் அதிகமாக வருமானம் ஈட்டிய நபர்களின் பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. 30 மில்லியன் டாலர், அதாவது 219.14 கோடி ரூபாயை ஈட்டி முதல் இடத்தைப் பிடித்து யூடியூப் நட்சத்திரமாக ஜொலிக்கிறான் ரயான் காஜி. இவனது ‘ராயன்’ஸ் வேர்ல்டு’ சேனலுக்கு 2.77 கோடி சந்தாதாரர்கள். சந்தைக்குப் புதிதாக வரும் பொம்மைகளைப் பற்றி விமர்சனம் செய்வது இவனது முக்கிய நிகழ்ச்சி. இதுவரை 1800 வீடியோக்களை பதிவு செய்திருக்கிறான். ஒவ்வொரு வீடியோவும் கோடிகளில் பார்வைகளை அள்ளும். இத்தனைக்கு ரயானின் வயது 9. நான்கு வயதிலிருந்தே யூடியூப்பில் வீடியோக்களை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டான் இந்த பில்லினியர்.

Tags : Income
× RELATED தேசிய வருவாய்த்தேர்வு: விடைக்குறிப்பு வெளியீடு