சென்னை: அகில இந்திய பார்கவு–்ன்சில் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் டிசம்பர் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். வழக்கறிஞர்களின் தலைமை இடமாக இருக்கின்ற இந்திய பார் கவுன்சில், சட்ட கல்வியை ஒழுங்கு படுத்தி வருகிறது. இந்நிலையில், அகில இந்திய அளவிலான தகுதித் தேர்வை 2021ல் நடத்துவதற்கான தேதியை இந்திய பார்கவுன்சில் அறிவித்துள்ளது.
இதன்படி, 16வது அகில இந்திய வழக்கறிஞர் தகுதித் தேர்வு மார்ச் 21ம் தேதி நடக்க உள்ளது. இதையடுத்து இந்த தேர்வு எழுத விரும்புவோர், டிசம்பர் 26ம் தேதியில் முதல் பிப்ரவரி 2021, 21ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த முறை அறிவிக்கப்பட்ட 15வது அகில இந்திய வழக்கறிஞர் தகுதித் தேர்வு, 2021ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி நடக்க உள்ளது.
அதற்கு பிறகு 16வது தேர்வு நடக்கும். இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 140 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கான தேதியே இறுதியானது. இது மேலும் தள்ளிப்போக வாய்ப்பில்லை.
