×

காதலி குளிக்கும்போது வீடியோ எடுத்து 20 லட்சம் கேட்டு மிரட்டிய காதலன் கைது

பெரம்பூர்: வியாசர்பாடியை சேர்ந்தவர் சுஜாதா (30). பெயர் மாற்றப்பட்டுள்ளது.  இவர், கடந்த 2012ம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்தபோது,  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவேங்கடபுரம்  பகுதியை சேர்ந்த ரமேஷ் (46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு 2013ம் ஆண்டு சுஜாதா மயிலாப்பூரில் வேலை செய்தபோது,  அங்கு வேலை செய்த  முருகேசன் என்பவர் சுஜாதாவுக்கு பலவகையில் தொல்லை கொடுத்துள்ளார். இந்த பிரச்னையில் ரமேஷ் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளார். இதனால், ரமேசுக்கும், சுஜாதாவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், சுஜாதா குளிப்பதை செல்போனில் படம் பிடித்துள்ளார்.

பின்னர், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க 20 லட்சம்  ரூபாய் தரும்படி ரமேஷ் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சுஜாதா 3 லட்சம் ரூபாய், 12 சவரன்  நகையை கொடுத்துள்ளார்.  ஆனாலும், தொடர்ந்து பணம் கேட்டு ரமேஷ் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி சுஜாதா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், ரமேஷ் மீது வன்கொடுமை  தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Boyfriend arrested for threatening to take video of girlfriend taking bath
× RELATED தர்மபுரியில் திருமணம் செய்யாமல்...