×

வேலூர் மத்திய சிறையில் 12வது நாளாக உண்ணாவிரதம் முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றம்

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறை  விதிகளை மீறி வெளி நாட்டில் உள்ள ஒருவரிடம் முருகன் வீடியோ கால் பேசியுள்ளார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தனது தாய், மகளுடன் தொலைபேசியில் பேச  அனுமதிக்கக்கோரி நேற்று 12 வது நாளாக முருகன் உண்ணாவிரதம் தொடர்ந்தார். இதனால் முருகன் நேற்று சோர்வடைந்தார். இதையடுத்து அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாகவும், அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து  கண்காணித்து வருவதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Murugan ,Vellore Central Jail , urugan fast at Vellore Central Jail for 12 days
× RELATED சிவாலய முருகனின் உலாத் திருமேனிகள்