×

அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புதொகை வைக்க டிச.11ம் தேதி கடைசி நாள்: முதன்மை அஞ்சல் அதிகாரி தகவல்

சென்னை:  சென்னை பொது அஞ்சலக முதன்மை அஞ்சல் அதிகாரி  நேற்று வெளியிட்ட அறிக்கை: வங்கி சேவையில் இறங்கிய அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்பு தொகை 50 ஆக இருந்தது. இதை ₹500 ஆக  உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே, சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையை ₹500 ஆக உயர்த்திக் கொள்ள வரும் டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பு தொகையை ₹500 ஆக உயர்த்தாத பட்சத்தில் மார்ச் மாதம் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ₹100ம், ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்பு தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதி ஆகிவிடும்.  எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புதொகையை ₹500 ஆக வரும் டிசம்பர் 11ம் தேதிக்குள் உயர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Last day to keep minimum balance in postal savings accounts: Dec. 11: Chief Postmaster Information
× RELATED வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில்...