×

அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் உரை: திருச்சி சிவா எதிர்ப்பு

சென்னை: அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் பேசியதற்கு திமுக எம்.பி திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் மோடி இந்தியில் பேசியது எதுவும் புரியவில்லை. இந்தி பேச்சு புரியவில்லை என திருச்சி சிவா கூறியும் தொடர்ந்து இந்தியிலேயே பேசி முடித்துள்ளார் பிரதமர். பிரதமர் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு கூட எழுத்து வடிவில் இடம்பெறாததால் ஏமாற்றம் அடைந்துள்ளார். மாநிலங்களவை திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் என்ற வகையில் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் திருச்சி சிவா. அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.பாலுவும் மோடியின் இந்தி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

Tags : Modi ,speech ,protest ,Trichy Siva ,meeting , Trichy Siva
× RELATED ஜனநாயகத்தை காக்க இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு