×

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலைய பின்புறம் நரிக்குறவர் காலனியை மழைநீர் சூழ்ந்தது-பொதுமக்கள் தவிப்பு

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பின்புறம் வீரன் நகர் உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நரி குறவர் சமுதயா மக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மழை பெய்யும்போதெல்லாம் முதலில் பாதிக்கப்படுவது வீரன் நகர்தான்.

இவர்களது பகுதி வழியாக வளவன் வடிகால் தூர்வாராததால் வெங்காய தாமரைகள், காட்டாமணக்கு செடிகள் மண்டி கிடப்பதால் மழைநீர்வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் மழைநீர் வழிய வழியில்லாமல் வீரன் நகர் பகுதியில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து நரி குறவர் சேவா சங்க தலைவர் செல்வம் கூறிகையில்,பொதுப்பணித்துறை சார்பில் வளவன் வடிகால் முகத்துவாரத்தில் இருந்து நாகை சாலை வரை தூர்வார ரூ.3 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு சரியாக தூர்வாராததால் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது.

நாகை சாலை அரசு போக்குவரத்து பணிமனை அருகே செல்லும் வளவன் வடிகால் வாய்க்காலில் உள்ள அடைப்பை தூர்வாரினால் மட்டுமே மழைநீர் வடியும் நிலை ஏற்படும். உடனடியாக இதுகுறித்து நகராட்சி நிர்வாக நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் நரிக்குறவர் காலனியில் வசித்து வருபவர்களுக்கு தேவையான குடிநீர் உணவு உள்ளிட்ட அத்தியாசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நரிக்குறவர சமுதாய மக்கள் கோரிக்கையாகும் என்றார்.

Tags : Narikkuvar Colony ,Thiruthuraipoondi New Bus Stand-Public Suffering , Thiruthuraipoondi: Thiruvarur District Thiruthuraipoondi New Bus Stand is located behind Veeran Nagar. In which
× RELATED மாதக்கணக்காக தேங்கி நிற்கும் மழைநீர்...