×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சடச்சிவாக்கம் கிராமத்தில் சிலர், கஞ்சா விற்பனை செய்வதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று அதிகாலையில், அங்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ் (21) என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது. தையடுத்து போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் யாரிடம் கஞ்சா வாங்கி விற்பனை செய்தார். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என விசாரிக்கின்றனர்.Tags : Youth arrested for selling cannabis
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது