×

சென்ட்ரல்- விஜயவாடா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: விஜயவாடா- சென்னை சென்ட்ரல் இடையே அதிவேக சிறப்பு ரயில் (02711) டிசம்பர் 1ம் தேதி முதல் தினமும் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு அதேநாளில் பிற்பகல் 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். அதைப் போன்று சென்னை சென்ட்ரல்- விஜயவாடா இடையே அதிவேக சிறப்பு ரயில் (02712) டிசம்பர் 1ம் தேதி முதல் பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு அதேநாளில் விஜயவாடாவுக்கு இரவு 9.10 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.

Tags : Central ,Vijayawada , Special trains between Central and Vijayawada
× RELATED ரயில்களில் மீண்டும் உணவு சப்ளை: ஐஆர்சிடிசி முடிவு