×

குஜராத் மருத்துவமனையின் கொரோனா வார்டில் தீ 5 நோயாளிகள் கருகி பலி: 5வது முறையாக பயங்கரம்

குஜராத்: குஜராத் மாநிலம், ராஜ்காட்டில் உள்ள சிவானந்த் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 33 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை மருத்துவமனையில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவியது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும், ஊழியர்களும் மீட்கப்பட்டனர். எனினும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 5 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீட்கப்பட்ட நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கு முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ராஜ்காட் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துரதிருஷ்டவசமான  சம்பவத்தால் அன்புக்குரியவர்களை இழந்து வரும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,’ என கூறியுள்ளார். குஜராத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் கடந்த ஆகஸ்டில் இருந்து ஏற்கனவே 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்தது 5வது சம்பவமாகும். அகமதாபாத்தில் கடந்த ஆகஸ்டில் நடந்த தீ விபத்தில் 8 நோயாளிகள் கருகி பலியாகினர்.Tags : hospital ,death ,Gujarat ,Corona ,ward , Of Gujarat Hospital Corona Ward Fire 5 patients burnt to death: Terrible for the 5th time
× RELATED அரசு மருத்துவமனையில் அவலம்: ஊழியர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி