×

10 கோடிக்குள் தயாராகும் படங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை: தெலங்கானா அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக திரையுலகம் முடங்கி உள்ளது. தற்போது தளர்வுகள் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது, படப்பிடிப்புகள் நடக்கிறது. ஆனால் மக்கள் தியேட்டருக்கு வரத் தயங்குகிறார்கள். பெரிய பட்ஜெட் படங்கள் வௌிவருவதில் தயக்கம் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு திரைத்துறையை மீட்டெடுக்க தெலங்கானா அரசு, தெலுங்கு திரைப்படத்துறைக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.அதன்படி 10 கோடி பட்ஜெட்டுக்குள் தயாராகும் படங்கள் வெளியாகும்போது டிக்கெட் கட்டணத்தில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி அவர்களுக்கே திருப்பி அளிக்கப்படும்.

தியேட்டர்களுக்கு குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்கப்படும், தியேட்டர்கள் தங்களின் விருப்பப்படி காட்சிகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம், அதற்கு அரசின் அனுமதி தேவையில்லை.  இவைகள் உள்பட ேமலும் சில சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்காக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு நடிகர்கள், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, இயக்குனர் ராஜமவுலி உள்பட பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.


Tags : govt ,Telangana , No GST for films under Rs 10 crore: Telangana govt announces
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...