×

நிவர் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்: எர்ணாவூர் நாராயணன் வேண்டுகோள்

சென்னை: சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்ட பிறகு மக்களை பள்ளி, திருமண மண்டபங்களில் தங்கவைப்பதை தவிர்த்து, முன்னேற்பாடாக கடலோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும். அதிகாரிகள் அலுவலகத்திலிருந்து பணி செய்யாமல் களத்தில் இறங்கி பணி செய்யவேண்டும். சென்னையில் முக்கிய நெடுஞ்சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள்  அவதிப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி ஆணையர் கூடுதல் கவனம் செலுத்தி மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாதாள சாக்கடை குழாய்களில் மழைநீர் தேங்காதவாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிடவேண்டும். பழுதான மின் கம்பங்களை உடனே அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பாதுகாப்பாக இருக்கும். புயல்பாதிப்பின்போது அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும் உதவிட முன் வரவேண்டும். இவ்வாறு எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளார்.

Tags : Hurricane Nivar ,Ernavur Narayanan , People should be protected from the effects of Hurricane Nivar: Ernavur Narayanan's request
× RELATED டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட...