×

ராஜரத்தினம் மைதானத்தில் அணிவகுப்பின் போது ஆயுதப்படை எஸ்எஸ்ஐ மயங்கி விழுந்து பலி

சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அணிவகுப்பின் போது ஆயுதப்படை சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் சக போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஆவடி ஜே.பி.நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி (58). இவர், சென்னை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் ஆயுதப்படை காவலர்கள் பணிக்கு முன்பு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று காலை நடந்தது. அப்போது அந்ேதாணிசாமி திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக ஆயுதப்படை காவலர்கள் அந்தோணிசாமியை மீட்டு காவலர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் டாக்டர்கள் பரிந்துரைப்படி மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆய்வு செய்த டாக்டர்கள் எஸ்எஸ்ஐ அந்தோணிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அதை கேட்டு காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அந்தோணிசாமிக்கு மரியபுஷ்பம் என்ற மனைவியும், ஆர்டின்ராஜா மற்றும் மார்டின் ராஜா என்ற 2 மகன்களும் உள்ளனர். பணியின் போது எஸ்எஸ்ஐ உயிரிழந்த சம்பவம் போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Tags : SSI ,march ,ground ,Rajaratnam , Armed SSI fainted and killed during a rally at Rajaratnam ground
× RELATED 72-வது குடியரசு தினத்தை ஒட்டி...