×

முகமது சிராஜ் தந்தை காலமானார்

ஐதராபாத்: இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜின் தந்தை முகமது கவுஸ் (53), நுரையீரல் பாதிப்பு காரணமாக ஐதராபாத்தில் நேற்று  காலமானார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சிராஜ் (26) தற்போது 14 நாள்  தனிமைப்படுத்தலில் இருப்பதுடன், சக வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்து வருகிறார். தந்தையின் மரணம் குறித்த தகவலால் சோகத்தில் ஆழ்ந்த  அவருக்கு இந்திய அணியினர் ஆறுதல் கூறி வருகின்றனர். இறுதிச் சடங்கில் பங்கேற்க விரும்பினால் நாடு திரும்பலாம் என கிரிக்கெட் வாரியம்  தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருக்க அவர் முடிவு செய்துள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிராஜ் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவானதில் அவரது தந்தையின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம்  வாய்ந்ததாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 13வது சீசனில் ஆர்சிபி அணிக்காக 9 போட்டியில் விளையாடிய சிராஜ் 11 விக்கெட் கைப்பற்றினார்.  இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ள அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில்  இடம் பெற்றுள்ளார்.


Tags : Mohammad Siraj , Mohammad Siraj's father passed away
× RELATED அரசு மருத்துவரிடம் தகராறு தந்தை, மகன் மீது வழக்கு பதிவு