×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் ரூ.30 கோடிக்கு புது ரக ஜவுளி கொள்முதல் செய்ய திட்டம்: நிர்வாகம் தகவல்

சென்னை: கோ -ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனராக மைதிலி ராஜேந்திரன் சமீபத்தில் பொறுப்பேற்றார். அவர், பொறுப்பேற்றவுடன்  கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி விற்பனையை பெருக்க தேவையான நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் பேரில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள விற்பனை நிலையங்களில் ரூ.3 கோடியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு ரக போர்வைகள் கொள்முதல் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த போர்வை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டன.

இதேபோன்று தமிழகத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் பல்வேறு ரகங்களில் ஜவுளி பொருட்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று ரூ.30 கோடியில் சேலை, வேட்டி, சட்டை, போர்வை உள்ளிட்ட பல்வேறு ரக ஜவுளி பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து ஓரிரு நாட்களில் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் இந்த பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று கோஆப்டெக்ஸ் ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். இதன் மூலம் தீபாவளி விற்பனை அதிகாரிக்கும் என தெரிகிறது.

Tags : Co-optex ,Diwali , Co-optex plans to buy new textiles worth Rs 30 crore ahead of Diwali: Management
× RELATED வலங்கைமானில் மூடிக்கிடக்கும் கோஆப்டெக்சை மீண்டும் திறக்க வலியுறுத்தல்