×

தற்கொலை செய்த டாக்டர் கடைசியாக எழுதிய ஒரிஜினல் கடிதத்தை கேட்டு வீடு புகுந்து மிரட்டிய போலீஸ்: எஸ்.பியிடம் மனைவி பரபரப்பு புகார்

நாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த பறக்கை, இலந்தவிளை பகுதியை சேர்ந்த குமரி கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி மாவட்ட துணை அமைப்பாளர் சிவராம பெருமாள்(43). இவர் தற்கொலைக்கு முன்பாக கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்தநிலையில், அவரது மனைவி சீதா, போலீசார் மீது குமரி மாவட்ட எஸ்.பி.க்கு ஆன்லைனில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் கணவரை இழந்து மிக மன வருத்ததுடன் அழுதுகொண்டிருந்தபோது 26ம் தேதி இரவு  9 மணியளவில் சுசீந்திரம் எஸ்ஐ ஆறுமுகம் மற்றும் ஒரு போலீஸ்காரர் வந்து உறவினர்களை வெளியே அனுப்பிவிட்டு உங்கள் கணவர் இறப்பதற்கு முன்பாக எழுதி வைத்த ஒரிஜினல் லெட்டர் எங்கே, அதனை இப்போது எங்களிடம் தர வேண்டும்.கேசை முடிக்க கையெழுத்து போட வேண்டும் என்றனர்.

எனது அண்ணன் டாக்டர் ஜெயக்குமார் வீட்டிற்குள் வந்ததும் அவரிடம் வெளியில் செல்லுங்கள் விசாரிக்க வேண்டியுள்ளது என்றனர். அதற்கு அவர் நாளை எஸ்.பி.யை பார்த்து புகார் கொடுக்கிறோம். அவரிடம் கடிதத்தை கொடுக்கிறோம் என்றார். இந்த விவகாரத்தில் எனது கணவரின் இறுதி வாக்குமூல கடிதத்தை கேட்டு அதனை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது எனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதையடுத்து சுசீந்திரம் போலீசாரிடம் இருந்து குற்றப்பிரிவு போலீசாருக்கு வழக்கை மாற்றி எஸ்.பி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

Tags : doctor ,home ,suicide ,SP , Wife complains to SP
× RELATED கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை...