×

ஐப்பசி பவுர்ணமி சதுரகிரி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் ஒருவர் மரணம்

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி கடந்த அக்.28ம் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நேற்று கடைசி நாள் என்பதால், தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அடிவாரத்தில் பக்தர்கள் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இங்குள்ள வழுக்கல் அருவி, ஓடைகளில் தடையை மீறி பக்தர்கள் குளித்தனர். சதுரகிரிக்கு தரிசனத்துக்கு வந்த விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தங்கப்பாண்டி (38) திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்.

Tags : devotees ,Ippasi Pavurnami Chaturagiri , One person was killed when devotees gathered at the Ippasi Pavurnami Chaturagiri temple
× RELATED பக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்!: புகைப்படங்கள்