×

பொருளாதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் குழு அளித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை..! '

சென்னை: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் குழு அளித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கொரோனா காரணமாகத் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால்  தனிநபர் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டனர்.  இதனால் மீண்டும் பொருளாதாரத்தை  உயர்த்தும் நோக்கில், ரிசர்வ் வங்கியின் முன்னாள்  ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில், முன்னாள் தலைமைச் செயலர் என்.நாராயணன்,சென்னைப் பல்கலை துணைவேந்தர், பி.துரைசாமி, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் என்.குமார், சென்னை பொருளாதாரப் பள்ளி இயக்குநர் கே.ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

மேலும், கடந்த மாதம் , முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு 275 பக்க அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் குழு அளித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பொருளாதார மேம்பாடு குறித்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பங்கேற்று உள்ளனர்.

Tags : Palanisamy ,Governor ,Reserve Bank Rangarajan Committee , Economy, Reserve Bank, Former Governor, Report, Chief Palanisamy, Consulting
× RELATED தடுப்பூசி குறித்து வெள்ளை அறிக்கை...