×

கொரோனா தாக்கத்தில் இருந்து மீளும் இந்தியா.. எகிறும் குணமடைந்தோர் எண்ணிக்கை.. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் மளமளவென சரிகிறது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.20 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 79 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 43,893 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 79,90,322 ஆக உயர்ந்தது.
* புதிதாக 508 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,20,010.ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 58,439 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 72,59,509  ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,10,803 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 90.85% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.50% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.64% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 10,66,786 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 10,54,87,680 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : India , India, corona, healed, rate
× RELATED மீண்டும் சதமடித்தார் ஸ்மித் 2வது...