×

தமிழகத்தில் மூன்றாவது நாளாக 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா: 11 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் மூன்றாவது நாளாக 3 ஆயிரத்துக்கும் கீழ் தொற்று குறைந்த நிலையில் நேற்று 2,708 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7,11,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 11 ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழக சுகாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 72,236 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,708 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 4,014 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 6 லட்சத்து 71 ஆயிரத்து 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 29 ஆயிரத்து 268 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,956 ஆக உயர்ந்துள்ளது.

Tags : deaths ,Tamil Nadu , At least 3 thousand corona for the third day in Tamil Nadu: 11 thousand casualties
× RELATED தமிழகத்தில் கொரோனா 7,427 ஆக குறைந்தது